பொன்னேரி, மே. 29 –

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள உப்பரப்பாளையம் கிராமத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கிணறு ஒன்று இருந்தது.

அக்கிணறு நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத இந்த கிணற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் கோடை வெயில் தாக்கத்தால் அப்பகுதியில் நீர்மட்டம் குறைந்தது. இதனால் இந்த கிணற்றை உடனடியாக மீண்டும் தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் தூர்வாரி ஆழம் தோண்டி புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் நடைபெற்றது.

அதன் பணிகள் முடிவுற்று கிணறு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக் குழுப் பெருந்தலைவர் கே.ஜி.வி.உமாமகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜி.ரவி,முன்னாள் சேர்மன் ஈஸ்வரி ராஜா,தடபெரும்பக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு,துணைத் தலைவர் சபிதா, ஊராட்சி செயலர் நாகம்மா, நேதாஜி அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீதர் பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் பரிமளம் ஜெயா,நாலூர் சகாதேவன், கொடூர ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி மகேந்திரன்,முன்னாள் சிறுவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாளையம் தன்னார்வலர்கள் பாலச்சந்தர், விக்னேஷ், அன்பு, அத்திப்பட்டு சாகுல் அமீது உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here