சோழவரம், பிப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலையில் வடக்கு மாவட்ட பாமக இளைஞர் அணியின் பொதுக்குழு கூட்டம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எம்.எஸ். சுதாகர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சமூக நீதி  பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, மாநில தேர்தல் பணி குழு தலைவர் மு.ஜெயராமன், முன்னாள் அம்பத்தூர் நகர மன்ற தலைவர் கே. என். சேகர், ஆகியோர் வருகை தந்தனர்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து விரிவாக சிறப்பு விருந்தினர்கள் நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்வை சீரழித்து வரும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தி அதற்கு காரணமான சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கும்மிடிப்பூண்டியில் அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும் எனவும், மக்களின் இன்னல்களை போக்கவும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் பொன்னேரியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்களை அப் பொதுக்குழுவில் நிறைவேற்றினார்கள்.

கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு நாடாளுமன்றத் தேர்தலை  பாமக மிக ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அப்போது கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வழக்கறிஞர் கே.பாலு அண்மையில் சென்னையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில்  கூட்டணி அமைத்துதான் நாடாளுமன்ற தேர்தலை தங்கள் சந்திக்க இருப்பதாகவும், கூட்டணி குறித்து முடிவெடுக்க மருத்துவர் ராமதாஸிற்கு முழு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளதாகவும் அப்போது அவர் செயெதியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் கூட்டணிக் குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் எனவும் மேலும் யாருடன் கூட்டணி என்பது குறித்து மருத்துவர் ராமதாசு அறிவிப்பார் என கூறினார்.

தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பாமக இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி கூட்டணி எனவும், மருத்துவர் ராமதாஸ் யாருடன் கூட்டணி என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை கூட்டணி தொடர்பாக வெளியாகும் அனைத்து செய்திகளும் யூகத்தின் அடிப்படையிலானது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்பட்டு மத்திய அமைச்சராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இருந்தபோது 108 அவசர ஊர்தி, பொது சுகாதார திட்டம், பொது இடங்களில் புகைபிடிக்க தடை போன்ற மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், தற்போது மீண்டும் மக்கள் வாய்ப்பளித்தால் பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் சார்ந்த மேலும் பல நல்ல திட்டங்களை கொண்டு வரும் என கூறினார்.

முன்னதாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் வி.எம். பிரகாஷ், இரா. சிவப்பிரகாசம், மாவட்டத் தலைவர் எஸ்.வி.ரவி, மாவட்ட சமூக நீதிப் பேரவை செயலாளர் வழக்கறிஞர் மாசிலாமணி, இளைஞர் அணி தலைவர் அன்பழகன், முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் துரை ஜெயவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here