திருவொற்றியூர், ஏப். 12 –

திருவொற்றியூர் நெடுஞ்சாலை அஜாக்ஸ் சந்திப்பில் உள்ளது இச்சாலை அச்சாலையில் தினமும் ஏராளமான பேருந்து, கார் மோட்டார்பைக், சைக்கிள் மற்றும் பாதசாரிகள் என அப்பகுதியில் இந்த சாலையைக் கடந்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில் அச்சாலையானது ஆண்டுக்கணக்கில் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் இருப்பதால் அச்சாலையில் பயணிக்கும் மேற்கண்ட அனைவருக்கும் தினமொரு விபத்துகளை தந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக இரவுநேரங்களில் அப்பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில் இரவுப்பணிக்கு செல்வோர் மற்றும் வீடுதிரும்புவோர் என பலதரப்பட்ட பொதுமக்கள் அச்சாலையில் விழுந்து படுகாயங்களுடன் …  வேலைக்கு போன கணவன், தகப்பன், பிள்ளை என நலமுடனும் பாதுகாப்புடனும் வீடு திரும்புவார்கள் என்று வீட்டில் இருப்போர் எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வீடு திரும்புகின்றனர். அப்பொழுதில் அவர்களின் உயிரே காக்கும் பொருட்டு பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

பொதுவாக சாலை வசதி என்பது தொழில் வளர்ச்சி, வியாபாரப் பெருக்கம், மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்து பயணம் போன்ற பல்வேறு காரணங்களை உள்ளடக்கிய கிராம, நகர, மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்சியை ஏற்படுத்துகிற அடிப்படை கட்டமைப்பாகும்.  இதனை புரிந்தும் புரியாமலும், அத்துறை சார்ந்த நிருவாகமும் சரி அரசும் அலட்சியப் போக்குடனே கையாள்வதாக அப்பகுதி மக்கள் மற்றும் தொழில் வளர்ச்சி சார்ந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் மற்றும் குற்றச்சாட்டாக தெரிவிக்கின்றனர்.

சாலை வசதிகளை பராமரிக்க தவறும் பட்சத்தில் பொதுமக்களின் உயிர் மற்றும் உடல் ஊனம் மற்றும் பல்வேறு கனவுகளோடு பயணிக்கும் பொருளாதாரத்தின் வளர்ச்சி இலக்கு என ஏனைய இழப்புக்களை எது கொடுத்தும் சரிசெய்ய முடியாத சூழல் ஏற்படும் என்பதால் இயன்றவரை சிறப்பாக செயல் பட்டு வரும் தற்போதைய அரசு பெரிதென இவ்விசயத்தில் கவனம் செலுத்தி உடன் இச்சாலையின் சீரமைப்பு பணியை செய்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here