திருவாரூர், ஏப்.18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
தேர்தல் பணி தருவதாக காலை முதல் காக்க வைத்து ஓய்வுப்பெற்ற காவல்துறையினரை திருப்பி அனுப்பியதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அதுக்குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்.. தேர்தல் பணிக்காக ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரிகளை நியமிக்க மாவட்ட காவல்துறை தீர்மானித்தது.
அதுக் குறித்து ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளிடம் மன்னார்குடி டிஎஸ்பி தேர்தல் பணிக்கு வர வண்டும் என வற்புறுத்தி அழைத்து, பணி ஆணைகளையும் அவர்களுக்கு வழங்கிய நிலையில், நேற்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சுமார் 40 ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டும். எனவும் மேலும் மீதமுள்ளவர்களுக்கு பணி இல்லை என திருப்பி அனுப்பி உள்ளனர்.
அதுக் குறித்து தேர்தல் பணிக்காக அழைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி செல்வம் சொல்லும் போது,
எங்களை வரவழைத்து, காலை முதல் காத்திருக்க வைத்து, மாலை 5 மணிக்கு எங்களிடம் ‘உங்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பணம் இல்லை’ எனவும் அதனால் உங்களுக்கு தேர்தல் பணி இல்லை என திருப்பி அனுப்பி விட்டார்கள் என்று மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்தார்.
நாங்கள் பணத்திற்காக இப்பணியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் வற்புறுத்தி எங்களை அழைத்ததினால்தான் தேர்தல் பணிக்கு ஒப்புக் கொண்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் காலை முதல் காக்க வைத்து மாலையில் ஒரே வார்த்தை சொல்லி திருப்பி அனுப்பியது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டார்.
மேலும் தேர்தல் பணிக்கான அனைத்து ஆவணங்களிலும் எங்களது பெயர் இருந்தும் திருப்பி அனுப்பியது மன வேதனைக்கு உள்ளாக்குகிறது என்றும் அப்போது அவர் தெளிவுப் படுத்தினார். மேலும் இதுகுறித்து தீர விசாரணை நடத்தி தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் காவல்துறை அதிகாரி செல்வம் போல காவல் துறை அதிகாரி ராஜேந்திரன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் பணிக்கு அமர்த்தப்படும் காவலர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூபாய் 5000 வழங்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களை நீக்கி, அந்த இந்த இடத்திற்கு ஊர்க்காவல் படையை சார்ந்தவர்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு குறைவான தொகை வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்கள்.
இது போன்ற நடவடிக்கைகளினால் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பகத்தன்மை சந்தேகத்திற்கு இடமாக வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் எண்ணுகின்ற நிலையில்தான் உள்ளது.
பேட்டி: செல்வம்
(ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் காவல்துறை)