திருவாரூர், மார்ச். 13 –

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேரோட்ட விழா ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மாவட்ட ஆட்சியர், உலக புகழ் பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்ட விழா ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்திட உத்தரவுப் பிறப்பித்துள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும், இவ் ஆழித் திருத்தேர் திருவிழாவிற்கு சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் ட்ரோன் முன் அனுமதி பெற்று மட்டுமே பறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

 

பேட்டி:சாரூஸ்ரீ மாவட்ட ஆட்சியர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here