மீஞ்சூர், ஜூன். 14 –

திருவள்ளூர் மாவட்டம் ஊரணம் பேட்டில் அமையவுள்ள அலகு 4 அனல்மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊரணம்பேடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையம் அலகு 4 இல் நடைபெற்று வரும் பணிகளை தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த மின் நிலைய திட்டத்தின் முக்கிய அம்சங்களாக மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட நீர் மறுசுழற்சி செய்யும் வசதி நிறுவப்பட்டுள்ளது. ஜீரோ வாட்டர் டிஸ்சார்ஜ் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தும் குறிக்கோளோடு புகை போக்கியிலிருந்து வெளியேறும் கந்தகத்தை நீக்கும் அதி நவீன தொழிற்நுட்பமான FGD Flue Gas Desulphurization நிறுவப்படவுள்ள அனல் மின் நிலையம் ஆகும்.

இம்மின்நிலையத்தில் காற்றில் வெளியேறும் சுற்றுப்புற குழலுக்கு ஊறு விளைவிக்கும் கந்தக நைட்ரஜென் ஆக்சைடு அளவுகள் ( SOx , NOx ) சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு  உட்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையத்தின் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் 1 யூனிட் 660 மெகாவாட் இரண்டு யூனிட் 1320 மெகாவாட் திறன் கொண்ட இந்த நிலையம் கடந்த 2010ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்பட்டு உற்பத்தி துவக்கி இருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக 53 விழுக்காடு பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் கட்டுமான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், வருகின்ற 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1 அலகும், ஜுன் மாத வாக்கில் 2 வது அலகிலும் உற்பத்தி துவக்கப்படும் என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது தமிழக மின்வாரிய துறை தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் நிலையங்களில் இயக்குனர் எத்திராஜ்,தலைமை பொறியாளர் (பொறுப்பு) சுப்பையா,மீஞ்சூர் ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி,திமுக மீஞ்சூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் வல்லூர் எம்.எஸ். கே.ரமேஷ்ராஜ், மாவட்ட கவுன்சிலர் அத்திப்பட்டு ஏ.ஆர்.டி.உதயசூரியன்,மாவட்ட பொருப்புக்குழு உறுப்பினர் எம்.எல்.ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here