திருவள்ளூர், பிப். 4 –

திருவள்ளூர் எம்.பி.எஸ் நகரில் வசித்து வருபவர் உதயகுமார் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு தீபலட்சுமி என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். உதயகுமாரின் மகள் சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த பிப் 2 ஆம் தேதி அன்று வழக்கம் போல் அவர் கல்லூரிக்கு சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிய வருகிறது. இது குறித்து தீபலட்சுமியின் தந்தை உதயகுமார் தனது நட்பு வட்டாரம் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தேடியும் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கதா தால் திருவள்ளூர் தாலுகா காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் தாலூகா காவல் நிலையப் போலீசார் காணமல் போன கல்லூரி மாணவி தீபலட்சுமியை தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here