செய்தி சேகரிப்பு ராஜன்
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் அடுத்த மணலி சின்ன சேக்காடு பகுதியில் ரூ.2 லட்சம் பொருள் செலவிலான 2500 எண்ணிக்கையிலான சில்வர் டம்பளார்களை கொண்டு 15 அடி உயர விநாயகர் சிலையை வடிவமைத்து அவ்வூர் மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள்.
திருவொற்றியூர், செப். 10 –
2500 சில்வர் டம்ளரில் 15 அடி உயர விநாயகர், காய்கறிகளில் செல்போனுடன் செல்பி விநாயகர், மணலியில் விநாயகர் சதுர்த்தி விழா அப்பகுதி மக்களால் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், குழுக்களாக சேர்ந்து சிலைகளை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது
தமிழக அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றும் விதமாகவும் அதே சமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை தடைபடாமல் கொண்டாடுவதற்கு மணலி பகுதியில் விசேஷமாக சில்வர் டம்ளரில் விநாயகர் சிலையை வடிவமைத்து வழிபட்டனர்
திருவொற்றியூர் அடுத்த மணலி சின்னசேக்காடு திருவேங்கடம் தெரு பகுதியில் அமைந்துள்ள சர்வ மங்களாம்பிகை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
முன்னதாக கோவிலின் வாசலில் 15 அடி உயரத்தில் 2500 சில்வர் டம்ளர்களை பயன்படுத்தி பிரம்மாண்ட விநாயகர் வடிவமைத்து பொதுமக்கள் வழிபட வைத்திருந்தனர்
இதனைப் போன்று பல்வேறு பொருட்களால் உருவாக்கப் பட்டிருந்த விநாயகர் சிலைகள் அப்பகுதியில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. காய்கறிகளால் விதவிதமாக கையில் செல்போனுடன் உருவாக்கப் பட்டிருந்த செல்பி விநாயகர், முருகர், ஓம் என்ற வடிவமைப்புகளால் அலங்கரித்து வைத்திருந்தனர்.
கத்திரிக்காயை பயன்படுத்தி செல்பி விநாயகர் பூசணிக்காயில் முருகர் தர்பூசணி பழத்தில் ஓம் என்ற வடிவமைப்பு வாழைப்பூவில் விளக்கு என அழகு படுத்திருந்தனர்.
இதன் மொத்த பொருள் செலவு 2 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. மணலி சின்னசேக்காடு மக்கள் ஒன்றிணைந்து புது விதமாக சில்வர் டம்ளரை கொண்டு விநாயகரை வடிவமைத்து பக்தியுடன் வழிபட்டனர்
விநாயகர் ஊர்வலங்கள் மேடை அலங்காரங்கள் அமைக்காத வாறு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.