கும்பகோணம், ஜூன். 29 –
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் தினேஷ்குமார் இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்த போது வாகனத்தில் ஏதோ சத்தம் கேட்டு உள்ளது. சந்தேகத்துடன் வண்டியை நிறுத்தி பார்த்துள்ளார். அதில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று இதுக்குறித்து திருவிடைமருதூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துவுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் பாம்பு உள்ளே இருந்தது தெரிய வந்தது.
ஒரு மணி நேரம் அதனுடன் போராடி இருசக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது.