திருவாரூர், மார்ச். 11 –

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் இன்றைய தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், அறிவிப்பு வெளியிடப்பட்ட இன்றைய தினமே திருவாரூர் நகரில் 3 மணி நேரத்துக்கு மேலாக தொடர் மின்வெட்டு நிலவியது. குறிப்பாக திருவாரூர் மின் செயற் பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ள துர்காலயா ரோடு, பனகல் சாலை, தெற்கு வீதி, வடக்கு வீதி, மடப்புரம், மருதப்பட்டினம், காட்டுக்காரத்தெரு உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மாலை 6:30 மணி முதல் மின்தடை நிலவியது.

மேலும், நாளைய மறுதினம் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் இவ் அறிவிக்கப்பட்டாத தொடர் மின் வெட்டால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.

தமிழ்நாடு மின் வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்ட அன்றே தமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இது போன்று நிலவிய மின்வெட்டு மின்வாரியத்தின் நிர்வாக திறமைக் குறித்து கேள்விக் குறியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் அந்நகர வாசிகள் ….

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here