தஞ்சாவூர் மாவட்டம், 06-

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த  பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அவ்விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டு சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா எதிர் வரும் 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி பேண்ட் வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக ஆலயம் முன்பு அமைந்துள்ள பிரம்மாண்ட கொடிமரம் முன்பு கொண்டு வரப்பட்டது. பின்னர் கும்பகோணம்  மறைமாவட்ட ஆயர் – ஜீவானந்தம் கொடிக்கு புனிதம் செய்து ஏற்றி வைத்தார். இதில் தமிழகம், கேரளா மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன்  வந்த ஏராளமான கிறிஸ்துவர்கள் மாதாவை வழிப்பட்டு சென்றனர்.

மேலும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா எதிர் வருகின்ற 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

 

பேட்டி :-   ஆயர் A.ஜீவானந்தம் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here