தேனி மாவட்டம் சுப்பன் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் தேனி மெட்ரோ கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைப்பெற்றது.

தேனி, ஜூலை,

 

தேனி மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக பொது சேவைகளில் ஈடுப்பட்டு வரும் மெட்ரோ கிங்க்ஸ் ரோட்டரிச் சங்கத்தின் ஆண்டுவிழாவும் பதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும் தனியார் மண்டபம் ஒன்றில் நடைப்பெற்றது. அவ் விழாவிற்கு ஜமீர் பாஷா (மாவட்ட 3000 ஆளுநர்) தலைமை தாங்க தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலை வகிக்க கணேஷ் ராஜீ குமார் (ராயல் தலைவர்),

ஸ்ரீராமகுரு (ராயல் செயலாளர்), ராம்சரண் (ராயல் பொருளாளர்) ஆகிய மூவரும் புதிதாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

 

அதன் பின்பு அம்மாவட்டத்தில் இச்சங்கத்தின் மூன்றாண்டு கால பொதுச் சேவைகள் குறித்த காணொளிக் காட்சியை சங்க உறுப்பினர்களுக்கு போட்டக் காட்டப் பட்டது.

அக் காணொளியில் அவர்கள் செய்த சாதனை களாக போலியோ விழிப்புணர்வு, பல் மருத்துவ முகாம், பல பள்ளிகளில் அரசு அறிவித்த மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித் தெடுப்பது பற்றியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்ற விழிப்புணர்வு,

குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு,

டெங்கு விழிப்புணர்வு,

பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து பல மரக்கன்றுகள் நடுதல் மற்றும் மரங்கள் அதிகம் வளர்த்தால் ஏற்படும் நன்மை போன்ற பற்றிய விழிப்புணர்வு உரையாடல் நிகழ்ச்சி, மேலும்

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இச்சங்கத்தின் சார்பாக பல கட்டமாக உதவிகள் செய்ததும்,

ஏவு கணை நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளன்று முன்னால் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருநாவுகரசு தலைமையில்  ரத்த தானம் வழங்குதல் விழிப்புணர்வு, தேனி மாவட்டத்தில் செய்துள்ளது பற்றி வீடியோ காணொளி மூலம்  காண்பித்தனர். பொது விதி மாற்றமாக முதன் முறையாக மெட்ரோ கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்குவதற்கு பதிலாக மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி  அனைவரும் மரக்கன்று நட வேண்டும் என்ற புதிய சிந்தனையை இக்கூட்ட நிகழ்ச்சியில் அறிமுக படுத்திய விதம் அனைவரையும் சங்க உறுப்பினர்களுக்கு ஆனந்த உத்தவேகத்தை ஏற்படுத்தியதை காண முடிந்தது.

 

இறுதியாக பேசிய மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் மெட்ரோ கிங்ஸ் ரோட்டரி சங்கம் பல நல்ல உதவிகளையும் பல விழிப் புணர்வையும் செய்து வருகின்றனர் என்றும், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களை எதிர்த்து விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் மெட்ரோ கிங்ஸ் ரோட்டரி சங்கத்திடம் கோரிக்கை வைத்தார்.

 

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழக துணை முதல்வர் o.பன்னீர்செல்வம் நாங்கள் செய்து வரும் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருவது எங்கள் பொதுச்சேவை செயல்களுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. என்றனர். அதனைத் தொடர்ந்து, சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், சிறந்த பயிற்சியாளர், சிறந்த நடத்துனர், ஓட்டுனர் ஆகியோருக்கு  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட 3000 ஆளுநர் பரிசுகளும் கேடயங்களும் வழங்கியதுடன் வந்திருந்த அனைவருக்கும் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி துணிப் பைகளும் வீட்டில் ஒவ்வொரு வரும் மரம் வளர்ப்பதற்கு விதை பந்துகள் வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் கிளப் நிர்வாகிகள், தண்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள்  என ஏராளமனோர் கலந்து கொன்டனார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here