தஞ்சாவூர், ஏப். 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை திருவிழா தேரோட்ட பந்தகால் முகூர்த்தம் இன்று சிறப்பாக நடைபெற்றது, அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்..

தஞ்சை பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்,அதன்படி இவ்விழா  கொடியேற்றத்துடன் கடந்த 6ந் தேதி சிறப்பாக தொடங்கியது.

இதனையடுத்து வரும் 20 ந் தேதி திருத்தேரோட்டம் தேரோடும் ராஜவீதிகளான மேலவீதி, வடக்குவீதி கீழவீதி, தெற்குவீதி ஆகிய நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற உள்ளது, இந்நிலையில் பிரமாண்ட தேரை அழகு படுத்தும் வகையில் தேரோட்ட பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது, முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தகாலுக்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு  அபிஷேகம் செய்தனர். பின்னர் பந்தகால் தேரில் நடப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது,

இந் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here