மயிலாடுதுறை, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
நாடகம் தோன்றி 1000 ஆண்டுகள் கடந்தும் – தற்போது உருவான திரை அரங்குகள் மூடுகின்ற நிலையில், இன்றும் பாய், சாப்பாடு கொண்டு வந்து விடிய விடிய நாடகம் பார்க்கும் மக்கள் – வியப்பில் ஆழ்த்தும் விநோதம்
மயிலாடுதுறை மாவட்டம், மணல் மேட்டை அடுத்துள்ளது மேலமருதாந்தநல்லூர் கிராமம். இங்கு சித்திரை திருவிழாவை ஒட்டி ஆண்டுதோறும் உத்திராபதி ஸ்வரர் ஆலயத்தில் கரகம் காவடி எடுத்து, அடுத்த மூன்று நாட்களும், புரான நாடகங்கள் அங்கு நடைபெறுவது வழக்கமாகும்.
அதனையொட்டி இந்த ஆண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, உத்திராபதீஸ்வருக்கு வேண்டுதல் எடுத்து கிராம மக்கள் காப்பு கட்டி நேற்று பழவாற்று கரையில் இருந்து கரகம், காவடி, பால்குடம் எடுத்து வந்து உத்திராபதீஸ்வரருக்கு, அபிசேக ஆராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, இரவு அரிசந்திரா எனும் புரான நாடகம் நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராமமே விழா கோலம் கண்டு, களைகட்டி காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடகத்தைக் காண்பதற்காக பல்வேறு கிராமங்களில் இருந்து ஆண்கள் பெண்கள், குழந்தைகள் வயது வேறுபாடின்றியும் பாலின வேறுபாடுகள் இன்றியும் கையில் படுக்கும் பாய்களை எடுத்து வந்து அங்கு விரித்தும் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வந்து அங்கு சாப்பிட்டும், நாடகத்தை கண்டு களித்தது. மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விஞ்சான வளர்ச்சி அடைந்துள்ள இக்காலத்திலும் நாடகத்தின் மீது மக்கள் தீராக் காதல் மேலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மொழி தோன்றி கலாச்சாரம் தோன்றி நாடகம் தோன்றி 1000 வருடங்கள் கடந்து இன்று சினிமா திரையரங்குகளே மூடப்பட்டு வரும் காலக் கட்டத்தில் புரானக் கால நாடகங்களை பார்க்க மக்கள் பாய் படுக்கை சாப்பாட்டோடு வந்து கண்டு களித்தது. மிகுந்த வியப்பை அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது.