பழவேற்காடு, மார்ச். 30 –  

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு அரசு துவக்கப் பள்ளியில் நடைப்பெற்று வரும் புதிய பள்ளி கட்டிட கட்டுமான பணியினை பார்வையிட இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் அங்கு புதிய பள்ளி கட்டிடம் கட்டிவரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். மேலும் அதனைத்தொடர்ந்து, கதா தொண்டு நிறுவனம் மூலம் இயங்கி வரும் கதா மேஜிக் லேப் எனப்படும் சிறப்பு வகுப்பறையையும் அதில் கல்விப் பயிலும் பழங்குடியின பள்ளிக் குழந்தைகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, அக்குழந்தைகளின் கல்வி நிலை குறித்து அறிந்துக்கொள்ள அக்குழந்தைகளிடம் கலந்துரையாடினார். அப்போது மாவட்ட ஆட்சியர் சற்றும் எதிர்பாராத நிலையில், அப்பள்ளியில் கல்விப் பயிலும் மூன்று பள்ளிக் குழந்தைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் ஒரே மூச்சில் மனப்பாடமாக பாடலாகப் பாடி மாவட்ட ஆட்சியரை திகைப்பில் ஆழ்த்தினார்கள்.

இதனைச் சற்றும் எதிர்ப்பார்க்காத மாவட்ட ஆட்சியர் மீண்டும் அக்குழந்தைகளை பாடச் சொல்லி தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். மேலும் தன்னை திகைப்பில் ஆழ்த்திய அக்குழந்தைகளுக்கு பாராட்டும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர்  பரிசு பொருட்களையும் அவர்களுக்கு வழங்கி அக்குழந்தைகளை ஊக்கப்படுத்தினார்.

மேலும் இச்சம்பவம் அங்கு இருந்த ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியருடன் வருகை தந்த அனைத்து துறை அரசு அதிகாரிகளையும் நெகழ்ச்சி அடையச் செய்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here