செங்கல்பட்டு, ஏப். 21 –

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து சோகண்டி வரை செல்லும் அரசு பேருந்து தடம் எண் 27 ன் பேருந்து ஓட்டுநரின் அடவடித்தனமான செயலால் அப்பேருந்தில் பயணிகள் அமரும் இருக்கை கழண்டு விழுந்தது. மேலும் அதில் அமர்ந்து பயணம் செய்த மகளிர் தூக்கி வீசப்பட்டு பேருந்துக்குள் நிலைதடுமாறி விழுந்தார். மேலும் அதிஷ்டவசமாக சிறு உட்காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து சோகண்டி எனும் நிறுத்தம் வரை இயங்கிவரும் அரசு பேருந்து தடம் எண் 27 ல் ஓட்டுனராக பணி செய்து வருபவர் சந்திரசேகர், மேலும் அதில் நடத்துனராக இருப்பவர் மணிமாறன் என்பவர் ஆவார்கள்.

மேலும் இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டில் இருந்து அப்பேருந்து சோகண்டி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அப்பேருந்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் தான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் அப்பேருந்தை நிறுத்தச் சொல்லிவுள்ளார்.

அப்போது அப்பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சந்திரசேகர் ஆவேசமடைந்து அதிவேகமாகவும், பொறுப்பற்ற தன்மையுடனும் அப்பேருந்தை அடவடித்தனத்தோடு பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். இதனால் அப் பேருந்தின் இடது புறமாக உள்ள முன்பக்க பயணிகள் அமரும் இருக்கை கழன்று முன்பக்கமாக கவிழ்ந்து விழுந்தது. மேலும் அதில் அமர்ந்திருந்த பெண்மணி ஒருவரும் தூக்கி வீசப்பட்டு பேருந்தின் உள்ளேயே நிலைத்தடுமாறி விழுந்துள்ளார். மேலும் அவர் அதிஷ்டவசமாக முன்புற கண்ணாடி வழியாக கீழே விழாதவாறு உயிர் தப்பினார். மேலும் அவருக்கு சிறிய அளவிலான உள்காயத்துடன் எழ முடியாமல் சிரமத்துடன் இருந்துள்ளார்.

மேலும் அச்சம்பவம் குறித்து ஓட்டுநரிடம் கேள்வியெழுப்பிய சக பயணியை அரசு பேருந்து ஓட்டுனர் சந்திரசேகர் தான் செய்த தவறுக்கு பொறுப்பேற்காமலும், வருத்தம் தெரிவிக்காமலும் அப்பயணியிடம் நக்கலாகவும், மேலும் மிரட்டும் தோணியிலும் உன்னையும் பேருந்தை ஏற்றி சாகடித்து விடுவேன் என்றவாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் அக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைராலாகி வருகின்றது. மேலும் அக்காட்சிகளை காண்போர் அரசு பேருந்து ஓட்டுநர் மன அழுத்தத்தால் அப்படி நடந்துக் கொண்டாரா அல்லது மனநோயாளியா இல்லை மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டினாரா என்றவாறு தங்களுக்குள் எழும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here