கும்பகோணம், ஆக. 02 –
கும்பகோணம் மாநகராட்சியின் 48 வது வார்டு, சாக்கோட்டையில் உள்ள சீனிவாச நகராகும். மேலும் அப்பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில், ஒரு கோடி மதிப்பீட்டில், பூங்கா கட்டப்பட்டு அப்பூங்காவினை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அப்பூங்காவில் முதியவர்கள் முதல் பல்வேறு வயதிலான மக்கள் அதிகாலையில் அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து அப்பூங்காவை இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வற்காகவும், மற்றும் சிறுவர்கள் விடுமுறை நாட்களில் காலை மாலை இருவேளை நேரங்களில், விளையாடி உடல் ஆரோக்கியத்தை பேணி காத்து வருகின்றனர்.
இதற்கிடையில், கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை இடித்துவிட்டு, அவ்விடத்தில் மண்டல அலுவலகம் கட்ட முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் அதுக்குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு வழங்கியும், அவர்கள் தொடர் முயற்சியில் ஈடுப்பட்டு வருவதால், அந்நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதி வாழ் பொதுமக்கள், அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தை கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், மற்றும் பல்வேறு அமைப்பினர்கள், சார்பில் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம. ராமநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகு தா. சின்னையன், ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், முன்னாள் மாமன்ற துணை தலைவர் ராஜா. நடராஜன், அம்மா பேரவை மாநகர செயலாளர் அயூப்கான், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சதீஷ்குமார், துணை தலைவர் வேதா, வழக்கறிஞர்கள் பார்வையாளர் வழக்கறிஞர் சுரேஷ், பாலகுரு, வெங்கட்ராமன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து பூங்காவை இடிக்கும் முடிவை கைவிட வேண்டும், இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டமாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முற்றகை மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தயிருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.