பொன்னேரி, டிச. 14 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பாலாஜி நகரை சேர்ந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க திருமணமாகாத இளைஞரான கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் இவர் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே அண்மை காலமாக வேலைக்கு செல்லாமலும் வேறு வேலை ஏதுமின்றியும் சும்மா இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பொன்னேரி சிவன் கோவில் பகுதியை சேர்ந்த திருமணமான பிரியாவிற்கும், கோபால கிருஷ்ணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சிறிது நாட்களுக்கு பின்னே இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை தொலைபேசியில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, அத் தகராறு மேலும் முற்றியுள்ளது.  இதனையடுத்து பிரியா கூலிப்படையினருடன் கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றுள்ளார் அங்கு அவர் இல்லாத காரணத்தினால் வீட்டில் உள்ளவர்களை மிரட்டி விட்டு  கோபாலக்ரிஷ்னனை தேடிவுள்ளனர், அப்போது பொன்னேரி நகராட்சி அலுவலகத்தின் அருகே அவர் தென் படவே அவ் இளஞனை  4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து  இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றனர்.

இச்சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் பொன்னேரி காவல்துறைக்கு தகவல் கொடுத்து, படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய இளஞனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனையடுத்து பொன்னேரி காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொடர்ந்து சென்னை புழலருகை நள்ளிரவில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, பிரியா கைது செய்யப்பட்டு,  பொன்னேரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைதான  பிரியாவிடம் பொன்னேரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும்  தப்பியோடிய 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அச்சம்ம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here