ஆர்.கே.பேட்டை, ஜன. 9 –

இன்று தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இயல்பு நிலைக்கு மாறாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருக்கும் வேளையில், அங்காங்கு தங்களின் முக்கிய மற்றும் அவசர தேவை கருதி அங்கொன்றும் இங்கொன்றுமாய் மிகச் சிறியளவிலான மக்கள் நடமாட்டம் இருப்பதை தவிர்ப்பதற்கு முடியாது எனலாம்.

அதுப் போன்றே திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை சோதனை சாவடியில் பாதுகாப்பு மற்றும் வாகனச் சோதனைகளில் ஈடுப்பட்டு வந்த ஆர்.கே.பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கோபால் அவ்வழியாக அவசர தேவைகளுக்கு மருத்துவமனை மற்றும் மருந்தகம் செல்வோர்கள் கொரோனா பரவல் தடுப்பு முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை கண்டித்து, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசு மற்றும் அதற்காக இரவு பகல் பாராமல் கொரோனா பரவலை தடுப்பதற்கான பணியில் ஈடுப்பட்டு வரும் மருத்துவர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர்  பல்வேறு பிரிவினர் பணியாற்றி வருகிறோம்,

மேலும், தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து எவ்வளவு விழிப்புணர்வுகளை மக்கள் நலன் குறித்து அறிவுறுத்தினாலும் கேட்பதிலைலயா என்றவாறு அவர்களுக்கு அறிவுறுத்தி, தனது சொந்த செலவில் முகக் கவசங்களை வாங்கி, தனக்கு சமூதாயத்தின் மீதுள்ள அக்கறையையும், கொண்டுள்ள பொருப்பையும் செயல் வடிவில் வெளிப்படுத்தினார்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here