திருவாரூர், டிச. 19 –

திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதியதாக திருத்தேர் செய்வதற்காக தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணி நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் அவ்வூர் மக்கள் இரு தரப்பிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியை அரசு திரும்ப பெறவேண்டும் மேலும் மேற்கொண்டு வரும் திருத்தேர் பணியினை உடனடியாக நிறுத்திட வேண்டும் என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலைமறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுப்பட்டனர்.

அச்சாலை மறியல் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அறநிலையத்துறைக்கு ஆதரவாகவும் அத்தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் வட்டாட்சியர் இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அவ்விரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களோடு நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூகமான முடிவு எட்டியதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட வடபாதிமங்கலம் பகுதியில் அப்பகுதியை பூர்வீகமாக கொண்ட பெருநிலக்கிழார் ஒருவருக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள் இருந்து வருகிறது. மேலும் அந்த பெருநிலக்கிழாருக்கு சொந்தமான பூர்வீக இடத்தில் அவர்களது முன்னோர்களால் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் என்ற பெயரில் பன்னெடுங்காலத்திற்கு முன்பாகவே சிவாலயம் கட்டி வழிபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அக்கோவிலுக்கு தினசரி பூஜைகள், பராமரிப்பு பணிகள் மற்றும் திருப்பணிகள் செய்வதற்காக   நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை அக்கோவிலுக்கு எழுதி வைத்துள்ளதாகவும், மேலும் அதில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து அப்பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்து வைத்துள்ளனர். எனவும் கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் இந்து சமய அறநிலையத்துறை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சிவாலயத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிர்வகித்து வருகிறது.   மேலும் இவ்வாலயத்திற்கு தேர் கட்டுவதற்காக  சுமார் ரூ.40 லட்சம் நிதியினையும் அண்மையில் ஒதுக்கியது. தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஆலயங்கள் பராமரிப்பு இன்றி சிதிலம் அடைந்துள்ள நிலையில், வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஆலயத்தினை இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதாக பொய் பிரச்சாரம் செய்தும்,  குற்றம்சாட்டினை எழுப்பியும்,  ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எதிர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய சூழலில் இவ்வாலயத்திற்கு தேர் கட்டுவதற்காக தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தனர் இந்நிலையில் தேர் கட்டுமான பணி  தொடங்கி நடைபெற்று வருகிறது தேர் கட்டகூடாது என வலியுறுத்தி   வடபாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு அக்கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் தேர் கட்டும் பணிக்கு ஆதரவு தெரிவித்து சாலைமறியல் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கூடினர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதை அடுத்து பதற்றமான சூழல் நிலையைக் கருத்தில் கொண்டு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.  பின்னர் வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இருதரப்பினரையும்  கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து பேசினர்.  இதில்  10 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற கருத்தினை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, அவ்விரு தரப்பினரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here