பெரியபாளையம், மார்ச். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஊரை காணவில்லை எனக் கூறி வடமதுரைக் கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் கண்டுப்பிடித்துதர தாமதிக்கும் பட்சத்தில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகேவுள்ள வடமதுரை ஊராட்சி அமைந்துள்ளது. மேலும் அவ்வூராட்சியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

அதனை ஏ, பி, சி என்றவாறு அக்கிராமத்தினை வகைப் படுத்தப்பட்டிருந்ததாகவும், இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வடமதுரை கிராமம் என்பது எர்ணாகுப்பம் என வருவாய்த்துறை ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதுக் கு‌றி‌த்து பல முறை வருவாய்துறை அலுவலகத்தில் புகார் மனுவளித்தும், வாய் மொழியாக நேரடியாக சென்று முறையிட்டும் அதுக் குறித்து இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையையும் வருவாய்துறையினர் எடுக்காததால் இன்று 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கிராம நிர்வாக அலுவலர் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

மேலும் தங்களது ஊரை காணவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்கள். மேலும் ஊரின் பெயர் ஆவணங்களில் மாறியுள்ளதால் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு அவசர தேவைகளுக்கு கூட மிகவும் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவித்தனர்.

இனியும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் எதிர் வரும் நாடாளு மன்றத் தேர்தலை நாங்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here