கடந்த அக் 6 – 2021 மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி மற்றும் 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கைத்தறி நெசவாளர்கள் திருபுவனம் கைத்தறி துணிநூல் இயக்குநர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

கும்பகோணம், நவ. 16 –

கும்பகோணம் அருகே திருபுவனம் கைத்தறி துணிநூல் இயக்குநர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பட்டு கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்னர்.

கும்பகோணம் அருகே திருப்புவனத்தில் தமிழகத்தில் கைத்தறி தொழில் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற செட்டி நாடு கண்டாங்கி சேலை, காஞ்சிபுரம், திருப்புவனம் பட்டு, சென்னிமலை போர்வைகள், நாகர்கோவில் வேட்டி, துண்டுகள், மதுரை சுங்குடி சேலைகள் என கைத்தறியில் பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

பாரம்பரிய கைத்தறி நெசவு தொழிலில்  தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். 1376 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இருந்தும் தமிழக சட்டமன்றத்தில் 06.10.2021 மானியக் கோரிக்கையில் கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு அறிவித்த கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீத உயர்வினை நிலுவைத் தொகையுடன் வழங்கிட வேண்டும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை மாதத்தின் முதல் வாரத்தில் வழங்கிட வேண்டும்.

கைத்தறி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பின் காரணமாக உற்பத்தி விலையில் 40 சதவீதம் உயர்கிறது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மீதே இந்த வரி உயர்வு திணிக்கப்படுகிறது. பொருட்களை வாங்கும் மக்கள் மீது இந்த விலை உயர்வு திணிக்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் காதிக்கு ஜிஎஸ்டிலிருந்து வரிவிலக்கு அளித்தது போல், கைத்தறிக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழக அரசு மழைக்கால நிவாரணம் மீனவர்களுக்கு வழங்குவது போல் கைத்தறி நெசவாளர்களுக்கு மூன்று மாத நிவாரணம் வழங்கிட வேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிட்கோ நகரில் உள்ள கைத்தறி துணிநூல் இயக்குநர் அலுவலகம் முன்பு தேசிய நெசவாளர்கள் சங்க தலைவர் சிவாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயபால் மாவட்ட துணைத்தலைவர் ஜீவபாரதி ஏஐடியூசி மாவட்ட குழு ஹரிதாஸ் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் சங்க செயலாளர்கள் நாராயணன் சேது உள்ளிட்ட ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் கலந்துக் கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here