மீஞ்சூர், டிச. 18 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட அபிராமபுரம் மற்றும் வேளூர் இருளர் காலனி உள்ளிட்ட கிராமங்களுக்கு சர்வதேச ஊழல் தடுப்பு கவுன்சில் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக மீஞ்சூர் ஒன்றியம், அபிராமபுரம் மற்றும் வேளூர் இருளர் காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடி கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அப்பாதிப்புகளுக்கு உள்ளான அம் மக்களுக்கு, சர்வதேச ஊழல் தடுப்பு கவுன்சில் சார்பில் அரிசி, ஆடைகள், மதிய உணவு, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று நேரில் வழங்கினர்.
இந்த அமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சுப்பிரமணி,மாவட்ட பொதுச் செயலாளர் முருகானந்தம், தலைவர் ராமதாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் கணேசன், உதவி தலைவர் அருள், செயலாளர் மகேஷ், நிர்வாகிகள் பாஸ்கரன், ராஜா, சந்தானம் உள்ளிட்டோர் அதனை வழங்கினார்கள். மேலும் நிவாரண் தொகுப்பினைப் பெற்றுக் கொண்ட கிராம மக்கள் சார்பில் கிராமத் தலைவர் பொன்னுரங்கம் மற்றும் சீனிவாசன் ஆகியோர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.