காஞ்சிபுரம், ஆக. 13 –
ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அத்தினத்தை முன்னிட்டு, ஆக 13 முதல் 15 வரை யிலான மூன்று நாட்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இந்திய தேசிய கொடியை ஏற்றி நமது தேசிய பற்றை வெளிப்படுத்த வேண்டும் என ஒன்றிய, மற்றும் மாநில அரசு தெரிவித்தது. அதனை நிறைவேற்றும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 40 உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
குறிப்பாக, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கீழ்கதிர்பூர், திருப்பருத்திக்குண்றம், கீழம்பி, திம்மசமுத்திரம், முசரவாக்கம் உள்ளிட்ட 40 ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும், கடைகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் தேசப்பக்தியை வெளிபடுத்தும் வகையில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.
காஞ்சிபுரம் ஒன்றியத்திற்க்குட்பட்ட 40 ஊராட்சியில் வீடுகள் தோறும பறக்க விடப்பட்ட கொடிகளை காஞ்சிபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் பார்வையிட்டு ஊக்கப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்க்குட்பட்ட 40 ஊராட்சியில் சுமார் 32,802 கொடிகள் வழங்கப்பட்டு அதனை அனைத்து ஊராட்சிகளிலும் ஏற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.