கும்பகோணம், பிப். 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனம் தோப்பு தெருவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீ செல்வமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தனர்.

திருவிடைமருதூர் தாலுகா, திருபுவனம் தோப்பு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ செல்வமாரியம்மன் திருக்கோயிலில் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சக்தியாக விளங்கும் விநாயகர், மற்றும் மாரியம்மன் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, கஜ பூஜை நடைபெற்று.

அதனைத் தொடர்ந்து, காவிரியாற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்று, முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது, தொடர்ந்து 7 ஆம் தேதி புதன் கிழமை இருவேளை யாகசாலை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து இன்று 8 ஆம் தேதி வியாழக்கிழமை 4 ஆம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹதியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மகா தீபாராதனை செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பூ மாரி பொழிய கடங்கள் புறப்பாடும் அதனை அடுத்து, விமான  கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் சிவாச்சாரியார்கள் விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து, மூலவர் சுந்தரமூர்த்தி விநாயகருக்கும் செல்வமாரியம்மனுக்கும் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்தனர்..  வெகுச்சிறப்பாகநடைப்பெற்ற அந் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டாமை காளிமுத்து,  பஞ்சாயத்தார் பக்கிரிசாமி, காரியதரிசி இராமச்சந்திரன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இளைஞர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வெகுச் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. என்பதனை அவ் விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here