கும்பகோணம், ஆக. 07 –

தமிழ்நாட்டில் கலைஞர் தனது 95 ஆண்டு கால வாழ்வில் பொது வாழ்க்கைக்காக ஏறத்தாழ 81 ஆண்டுகள் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, தேர்தலில் எந்நாளும் தோல்வியையைச் சந்திக்காத சட்டப்பேரவை உறுப்பினராக 60 ஆண்டுகள் பணியாற்றி, தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை பொறுப்பேற்று, 19 ஆண்டுகள் ஆட்சி செய்து, செயற்கரிய பல திட்டங்களை நிறைவேற்றி, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னேற்றம் காணச் செய்த இணையில்லாத் தலைவரான அவரது 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று,

அதனை, முன்னிட்டு தாராசுரம் திமுக ஒன்றியம் சார்பில் தாராசுரம் ரவுண்டானா அருகே துவங்கப்பட்ட அமைதி பேரணி முக்கிய வீதியாக வழியாக சென்று கலைஞரின் முழு உருவ சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த அமைதி பேரணியில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் துணை மேயர் சு.ப. தமிழழகன் மத்திய மண்டல ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், முத்து, தாமரைச்செல்வன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணிகள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கலைஞரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here