பழவேற்காடு, ஜன. 06 –

பழவேற்காட்டில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு விபத்து இழப்பீட்டுத் தொகையை போராடி பெற்று தந்த பஞ்சாயத்து தலைவருக்கு அக்குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் என திரளானவர்கள் அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட எடமணி கிராமத்தில் வசித்து வந்தவர் 35 வயதுடைய ராஜேஷ் என்பவர் .

மேலும் இவர் கடந்த 10-1-2022 அன்று பசியாவரம் மேம்பாலம் கட்டும் இடத்தில் விபத்து காரணமாக மரணம் அடைந்தார். இந்நிலையில் அவருக்கு மேகலா என்ற மனைவியும் ஹேமலதா, நாகலட்சுமி ஆகிய இரு பெண் பிள்ளைகளும் உள்ள நிலையில்,

அவரது இழப்பின் காரணமாக அக்குடும்பத்தினர் எவ்வித வருமானமும் இல்லாமலும், உதவி செய்ய யாருமில்லாமலும் மிகவும் வறுமையில் இருந்த நிலையில், அக்குடும்பத்தினருக்கு உதவிடும் நோக்கில் பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன் பெரும் முயற்சி மேற்கொண்டு அவக்குடும்பத்தினருக்கு விபத்தில் இறந்ததற்கான இழப்பீடு தொகையினை பெற்றுத் தருவதில் போராடி வந்தார்.

இந்நிலையில், ஊராட்சித் தலைவரின் விடாத முயற்சியின் பயனாக விபத்து இழப்பீடு தொகையாக பத்து மாதங்களுக்கு பிறகு ரூ. 4 லட்சம் கிடைத்தது. இதனை ராஜேஷின் மகள்கள் ஹேமலதா, நாகலட்சுமி ஆகிய இருவரின் பெயரில் பழவேற்காடு இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.

இச் செயலால் மனம் நெகிழ்ந்து போன ராஜேஷின் குடும்பத்தினர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணனுக்கும் கிராம மக்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், மனிதாபிமானத்தோடு இறந்து போன ஒருவருக்கு உடனடியாக இழப்பீடு தொகை பெற்று தந்த ஊராட்சி மன்ற தலைவரின் செயலை கண்டு அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here