காஞ்சிபுரம், ஏப். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .

காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், வாக்கு பதிவு முடிவுற்ற பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், செங்கல்பட்டு, ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர் சீலிடப்பட்டு கொண்டு வரப்படும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவி, விவிபேட், உள்ளிட்டவை தனித்தனி அறைகளில், வரிசை எண் படி வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் செயல்பட உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்துள்ள முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள பொது தேர்தல் பார்வையாளர் பூபேந்திர எஸ் சௌத்திரி மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான  கலைச்செல்வி மோகன் ஆகியோர் நேரில் சென்று முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து தேர்தல் பணி செய்யும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here