திருப்பனந்தாள், மார்ச். 13 –

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம், அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், தலைமையில் தெற்கு விதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பாரதிமோகன் திமுக ஆட்சியில் ஸ்டாலின் அவர் மகனை அமைச்சராக்கியதே மிகப்பெரிய சாதனை. மேலும், உதயநிதி ஸ்டாலினால் படங்கள் முடங்கியிருக்கின்றன எனவும், சினிமா படங்களை எல்லாம் குறைந்த விலைக்கு கேட்டதால்  படங்கள் பெட்டிக்குள் தூங்குகின்றன எனவும் அப்போது அவர் ஆவேசமாக பேசினார்.

மேலும் அவர்கள் அரசியலிலும் சம்பாதிக்கின்றனர். சினிமாவிலும் சம்பாதிக்கின்றனர் என்ற அவர் தொடர்ந்து, கடலில் 300 அடி தூரத்தில் ரூ.81 கோடியில் பேனா சிலை வைப்பது அவசியமா? அண்ணா அறிவாலயத்திலேயோ, கருணாநிதி நினைவிடத்திலேயோ, சிறிய அளவில் பேனா சிலை வைத்துவிட்டு, எழுதும் பேனாக்களை மாணவர்களுக்கு வழங்கலாமே? தற்போது எந்தத் திட்டமாக இருந்தாலும் அமைச்சர் உதயநிதிதான் அடிக்கல் நாட்டுகிறார் என்று அப்போது குற்றாட்டினார்.

மேலும்  ஏன் அக்கட்சியில் மூத்த அமைச்சர்கள் யாருமே இல்லையா? அரச பரம்பரையா ஸ்டாலின்? அவருக்குப் பிறகு அவர் மகன் என தொடர வேண்டுமா? திமுக போல் குடும்ப கட்சியல்ல அதிமுக. யார் வேண்டுமானாலும் கடுமையாக உழைத்தால் அதிமுகவில் உயர்ந்த பதவியை அடையலாம். என்று தெரிவித்தார்.

இப்பொதுக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, எவிகே அசோக்குமார், முத்துக்கிருஷ்ணன், சோழபுரம் அறிவழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவமணி, ராம.ராமநாதன், பேரூர் கழக செயலாளர் மூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் தலைமைக் கழக பேச்சாளர் கொடுமுடி பாரீஸ் ராஜா, கலந்து கொண்டு பேசுகையில், ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட பிரதான எதிர்க்கட்சி அதிமுக. இந்தக் கட்சியை ஒடுக்கவோ, அழிக்கவோ நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திய இயக்கம் அதிமுக. திமு க ஆட்சியில் எந்த ஒரு நலத்திட்டமும் இல்லை. அதிமுக என்பது தொண்டர்களால் ஆன கட்சி. தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட அம்மா கிளினிக்கில் என்ன தவறைக் கண்டுபிடித்தீர்கள். அதனை மூடிவிட்டீர்கள். ஏழை எளிய கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு லேப்டாப் வழங்கினோம். அன்று அதைக் கண்டு நாடே வியந்தது. இப்படி அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் 22 மாத சாதனை.” என தெரிவித்தார். தொடர்ந்து 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here