திருநின்றவூர், ஜன. 18 –

ஆவடி தாலூகா திருநின்றவூர் அடுத்துள்ள நத்தம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலையம்.

இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவ்வாலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மேசை மற்றும் நாற்காலிகள் வழங்கி அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூர் நத்தம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் ஆலயத்தில் ஆலய நிர்வாகி கலைவாணன் ஏற்பாட்டில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு 7 வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள், பூஜைகள் என செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு, சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய தமிழ் சங்கத் தலைவர் கலைமாமணி ஆவடி குமார் கலந்து கொண்டு அரசு உதவி பெறும் பள்ளிக்கு எம்.ஜி.ஆர். பக்தர் குழு சார்பில் எம்.ஜி. பாஸ்கர் ஏற்பட்டில் மாணவ மாணவிகள் அமரும் மேசை நாற்காலி போன்ற உபகரணங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, எம்ஜிஆரின் ஆலயத்தில் எம்ஜிஆர் ரசிகர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here