கும்பகோணம், ஆக. 04 –
கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில், கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இத்திட்டத்தின் படி கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகப்படுத்துதல் மற்றும் வருவாய் பெருக்கத்தை ஏற்படுத்த வழி வகுக்கும்.
இந்நிகழ்வு காவேரி கழிமுக வேளாண் மண்டலத்தின் தஞ்சை மாவட்ட பயனாளிகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி உத்தமர் காந்தி திருமண மண்டபத்தில், அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது.
கோவி செழியன் கறவை மாடு வைத்துள்ள விவசாயிகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து டானிக்கை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உதவி செயற்பொறியாளர் ஜெகதீசன், திட்ட அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜிகேஎம் ராஜா, திருவிடைமருதூர் பேரூராட்சி துணைத்தலைவர் சுந்தரஜெயபால், ஒன்றிய செயலாளர் கூகுர் அம்பிகாபதி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.