கும்பகோணம், மார்ச். 17 –

கும்பகோணம் ஸ்ரீநகர் காலணி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் என்பவர்கள் ஆவார்கள். மேலும் இவர்கள் இருவரும் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றினை அப்பகுதியில் நடத்தி வந்தனர்.

மேலும் இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் தொழிலின் மூலம் பலகோடி வரை சம்பாதித்த இவர்கள் அவர்களுக்கு சொந்தமான இடத்தில், ஹெலிகாப்டர் தளம் அமைத்து, ஹெலிகாப்டர் ஒன்றையும் சொந்தமாக வாங்கியுள்ளனர்.

இதனால் இவர்களை அப்பகுதி வாழ் மக்கள் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்றே மக்கள் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்குப் பணம் இரட்டிப்பாக்கி ஓராண்டில் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை இவர்கள் வெளியிட்டனர்.

இதனால் கவர்ச்சிகரமாக அறிவிக்கப்பட்ட இவர்கள் திட்டத்தினால் பலர் ஈர்க்கப்பட்டு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். முதலில் சில மாதங்கள் முதலீடு செய்தவர்களுக்குச் சரியாக பணத்தைத் திருப்பி அளித்து வந்துள்ளனர்.

ஆண்டு செல்ல செல்ல முதலீட்டாளர்களுக்குப் பணத்தைச் சரியான முறையில் திருப்பித் தரவில்லை என அந்நிறுவனத்தில் மதலீடு செய்த வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஒருக் கட்டத்தில் அந்திறுவனத்தின் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்த வாடிக்கையாளர்கள், “ற்றும் பணத்தை இழந்தவர்கள் இவர்கள் மீது காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களிடம் சுமார் ரூ.600 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக அந்நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாஜக கட்சியில் பொறுப்பில் இருந்த இவர்கள் இருவரையும் அக்கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கியது. மேலும் தொடர்ந்து ஹெலிகாப்டர் பிரதரஸ் தங்களிடம் ரூ.15 கோடி மோசடி செய்ததாகத் துபாய் தம்பதி அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை தீவிரமாக மேற்கொண்டனர் காவல்துறையினர்.

இந்தச் சூழலில் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸை காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து  கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஏற்கனவே இந்த நிதி மோசடி விவகாரத்தில் விக்டரி பைனான்ஸ் மேலாளர் ஸ்ரீகாந்த், கணக்காளர் மீரா, ஸ்ரீராம், வெங்கடேஷன், கணேஷின் மனைவி அகிலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  ஹெலிகாப்டர் சகோதரர்கள் எனப்படும் கணேசன் மற்றும் சாமிநாதன் ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இன்று காலை  கும்பகோணம் பெசன்ட் சாலையில் உள்ள கே.எம்.பி.எப் வங்கியில் கணேசன் மற்றும் சாமிநாதன் ஆகியோருக்கு சொந்தமான வங்கி பாதுகாப்பு பெட்டகங்களில் நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டில் முதலீடு செய்துள்ள ஆவணங்கள் போன்றவைகள் உள்ளனவா என்பதுக் குறித்து தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் ஆய்வாளர் சுதா ஆகியோர் தலைமையில் அதிகாலையில் இருந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சோதனைக் குறித்து காவல்துறை வட்டாரங்கள் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மற்றும் தகவலின் அடிப்படையில் அச்சோதனை நடைப்பெறுவதாக தெரிவிக்கின்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here