திருவள்ளூர், மே.01 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் அருகே பெற்ற பிள்ளை, மருமகளுடன் சேர்ந்து  தன்னை அடித்து வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர்  கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்துள்ளார்.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் தெருவை சார்ந்தவர் முதியவர் ரகுநாதன் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  இவர் உள்துறை அமைச்சகத்தில் மர தச்சு வேலை செய்து வந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு  அவருடைய  மனைவி  விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் தனது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மகன் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், மேலும் அவரின் திருமணத்திற்கு பின்பு வீட்டிற்கு வந்த மருமகள் மற்றும் மருமகளின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து ரகுநாதனை அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வயது மூப்படைந்த அவர் வேறு வேலைக்கு செல்ல உடல் ஒத்துழைப்பு தராததால், அப்பகுதியில் வீரராகவர் கோவிலில் பிச்சை எடுத்து பிழைப்பை வாழ்ந்து வருவதாக அவரின் நிலையைக் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடயே வழக்கறிஞர் ஜான் என்பவர் அவரை அழைத்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வைத்துள்ளனர். மேலும் மகள் வழி பேரன் தனது தாத்தாவை எப்படியெல்லாம் அடித்தார்கள் தெரியுமா என்றவாறும் மேலும் அவர் சாப்பிட வைத்திருந்த உணவை தட்டி விட்டார்கள் என கூறியது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here