திருமழிசை, ஏப். 06 –

திருமழிசை பேரூராட்சியின் அதிமுக கூட்டணி வார்டு உறுப்பினர்கள் துணைத்தலைவர் தேர்தலை நிராகரிப்பதற்கான நிலையில் உள்ளது குறித்து  செய்தியாளர்களை சந்தித்து அவர்களிடம் தங்கள் கருத்தை தெரிவிக்க முற்பட்ட போது, காவல்துறையினர் அவர்களுக்கு கட்டுப்பாடு விதித்ததால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் ஆறு அதிமுக கவுன்சிலர்களும் ,ஒரு பாமக கவுன்சிலரும், ஒரு சுயேட்சை கவுன்சிலரும் என மொத்தம் 8 கவுன்சிலர்கள் துணைத்தலைவர் தேர்தலைப் புறக்கணித்தனர்

திருமழிசை பேரூராட்சி அதிமுக செயலாளரும், கவுன்சிலருமான ரமேஷ் தலைமையில் துணைத்தலைவர் தேர்தல் புறக்கணிப்பு குறித்த தங்கள் கருத்தை செய்தியாளர்களிடம் தெருவிக்க பேரூராட்சி அலுவலக வாசலில் இருந்த நிலையில் அங்கு திடீரென வந்த காவல்துறையினர் பேரூராட்சி அலுவலக வாசலில் நீங்கள் செய்தியாளர்களை சந்தித்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

அதற்கு வார்டு உறுப்பினர்கள் நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலக வாசலில் நாங்கள் செய்தியாளர்களை சந்திக்க எந்த தடையும் இல்லை என பதில் கூறினர் இதனால் காவல்துறையினருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் சிறிதுநேரம் வாய்தகராறு ஏற்பட்டது

பின்பு வேறொரு இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த வார்டு உறுப்பினர்கள் திருமழிசை பேரூராட்சி அலுவலரின் மீது நம்பிக்கை இல்லாததால் சமீபத்தில் நடந்த துணை தலைவருக்கான மறைமுக தேர்தலை நிராகரித்தோம் என விளக்கமளித்தனர்.

திருமழிசை பேரூராட்சியின் தலைவர் பதவி தேர்தலின் போது மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர்கள் பங்குபெற்றனர் அதில் அதிமுகவிற்கு எட்டு பேரும் திமுக வுக்கு ஆதரவாக 7 பேரும் வாக்களித்தனர் அதிமுகவுக்கு வாக்களித்த 2 வாக்குகள் செல்லாது என கூறி திமுக வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

அதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது அதன் பின்னர் நடைபெறவிருந்த துணைத் தலைவர் தேர்தலும் நேர்மையான முறையில் நடைபெறாது எனவும் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் மீது நம்பிக்கை இல்லை எனவும் கூறி தேர்தலை புறக்கணிப்பதாக 8 உறுப்பினர் வார்டு உறுப்பினர்களும் தெரிவித்தனர்

பேட்டி: ரமேஷ்

திருமழிசை பேரூராட்சி அதிமுக செயலாளர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here