சுயதொழில் துவங்க விரும்பும் இளம் முனைவோருக்கு தமிழக அரசின் சார்பில் 25% மானியத்துடன் கூடிய ரூ. 5 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான கடனுதவி திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக வேலையில்லா திண்டாட்டத்தினை கட்டுபடுத்த உதவும் என்பது அரசின் நோக்கம் இவ்வாய்ப்பினை தகுதியுள்ள சுயதொழில் துவங்க விரும்பும் இளம் முனைவோர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி சுய மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என்பது திண்ணம். இதனை முறைப்படி பயன்படுத்திக் கொள்ளும்படி தமிழ்நாடு தொழில் வணிகத்துறை சார்பாக அறிவுறுத்துகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக இளம் முனைவோர்களின் வயது வரம்பு ;
விண்ணப்ப தேதி அன்று 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், பொதுப்பிரிவினர் 35 வயதிற்கு மேற்படாதவராகவும், சிறப்பு பிரிவினர் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
சிறப்பு பிரிவினர் என அடையாளப்படுத்தப் பட்டோர்;
மகளிர், ஆதிதிராவிடர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்டோர் வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மற்றும் மாற்றுத் திறனாளிகள்.
கல்வித்தகுதி ;
பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, ஐடிஐ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி சான்றிதழ் படிப்பு முடித்துவராக இருத்தல் வேண்டும்.
வசிப்பிடம் ;
விண்ணப்பதாரர் கடந்த மூன்றாண்டுகள் தமிழகத்தில் தொடர்ந்து வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள தொழில்கள்;
இலாபகரமாக செயல்படுத்தத்தக்க அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள்
திட்டமதிப்பு;
ஐந்து ரூ.5 இலட்சத்திற்கு மேல் ஒரு ரூ.1 கோடிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தொழில் முனைவோர் சொந்த முதலீடு;
பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 10% விழுக்காட்டையும், சிறப்புப் பிரிவினர் 5% விழுக்காட்டையும் தங்களுடைய சொந்த முதலீடாக செலுத்த வேண்டும்.
அரசு மானியம்;
திட்ட மதிப்பீட்டில் 25% – ம் அதிகப் பட்சமாக ரூ. 25 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
மானிய உதவிப்பெற தகுதியுடைய முதலீடுகள்;
தொழிற்கூடம் அமைக்க புதிதாக வாங்கப் படும் நிலம், புதிதாக வாங்கப்படவுள்ள – கட்டப்படவுள்ள தொழிற்கூடம் மற்றும் புதிதாக வாங்கப்படவுள்ள இயந்திரங்கள் தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் இவற்றிற்காக செலவிடப்படும் தொகை.
தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி;
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப் படும்.
பங்குதார நிறுவனங்களின் தகுதி;
ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் முனைவோர் கூட்டாக சேர்ந்து பங்குதார நிறுவனங்கள் அமைக்க இத்திட்டத்தின் கீழ் உதவிப் பெறலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரிகள் ;
சென்னை மாவட்டம்;
மண்டல இணை இயக்குநர் அலுவலகம்,
திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி.
சென்னை – 32
இதர மாவட்டங்கள்;
பொது மேலாளர் அலுவலகம்,
மாவட்ட தொழில் மையம்
தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்கநர் அலுவலகம்,
# 36, தெற்கு கால்வாய் கரை சாலை,
ராஜா அண்ணாமலைபுரம்,
மந்தைவெளிப்பாக்கம்,
சென்னை – 600 025