பாபநாசம், மார்ச். 11 –
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருப்பாலத்துறையில் இன்று பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்காக புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவஹிருல்லா அப்புதியக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் 40 க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டில் இறந்த நிலையில் ரம்மி தடை சட்ட மசோதாவை நிராகரித்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்பெற வேண்டும் என்றாவாறும், மேலும் முதல்வர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை தமிழக ஆளுநர் பார்ப்பது கூட கிடையாது எனவும், சட்டத்தை மதிக்காமலும், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலும் ஆளுநர் செயல்படுவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்..
மேலும் தமிழக முதல்வர் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாபநாசம் தொகுதி முழுவதும் நிறைவேற்றி வருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும் ஆளுநரை கண்டித்து சென்னையில் மாபெரும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பேட்டி :
முனைவர். ஜவஹிருல்லா – பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர்.