கும்பகோணம், ஜூலை. 16 –

கும்பகோணம் அருகே உள்ள கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

இச் செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு தலைமை கொறடா கோவிசெழியன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தனது சொந்த நிதியில் உதவி தொகை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் குறைகளை கேட்டிருந்தார்.

கார்பிரியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் கூலி தொழிலாளி ஆவர் அவர் அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் குடும்பத்துடன் உறங்கி கொண்டிருந்த போது அருகிலிருந்த மூங்கில் கொள்ளையிலிருந்து தீப்பொறி பட்டு சுதாகர் குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு  மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.

தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினா் மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இத் தகவலறிந்த அரசு தலைமை கொறடா கோவி செழியன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தனது சொந்த நிதியிலிருந்து உதவி தொகை வழங்கினார். உடன் திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெரும் தலைவர் கோ.க. அண்ணாதுரை மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ், கஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் அழகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று அரசு தலைமை கொறடா கோவி செழியன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here