கும்பகோணம், செப். 19 –

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள், வாண்டையார் இருப்பு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தின் ஒரு தூண் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்ட பணி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவிடைமருதூர் தாலுகா நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையம் உள்ளது. இந்த நீரேற்று நிலையத்தின் ஒரு தூண் நேற்று இரவு கீழே இடிந்து விழுந்தது. மேலும் மற்றொரு தூணிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் திட்டத்தின் ராட்சத குழாய் எந்தவித பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கிறது.

இந்நிகழ்வின் போது பணியாளர்கள் யாரும் அங்கு இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் கடந்த 15 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இப்பாலம் கீழே விழுந்ததைத் தொடர்ந்து புதிதாக பாலம் கட்டப்பட்டது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

மேலும் பாலத்தில் ஏற்பட்டுள்ள இப்பாதிப்பை, போர் கால அடிப்படையில் அரசு மற்றும் துறை சார்ந்த நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, குடிநீர் குழாய் செல்லும் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here