கும்பகோணம், பிப். 01 –

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மேற்படிப்புக்கான கல்வி முகாம் நேற்று அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் தலைமையில் நடைபெற்றது.

திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு பொதுத் தேர்வு முடிந்தவுடன் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் வேலை வாய்ப்புக்கள் உள்ள மேற்படிப்புக்கான பாடப்பிரிவுகளில் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எந்த கல்லூரியில் படிக்கலாம்? என்கிற ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிடும் கல்வி முகாம், அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் ஊடக கல்வி ஆலோசகர் சோமசுந்தரம், சர்வதேச மழலையர் கல்வி ஆராய்ச்சியாளர் கல்வியாளர் மற்றும் சமூக அலுவலர் ஷோபா மணிகண்டன், திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் கோ.க அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் மிசா மனோகரன், தலைமை ஆசிரியர்கள் பந்தநல்லூர் சண்முகவடிவு, கொடிப்பாலம் ஜான் ஹென்றிராஜ், ஆரலூர் சிவகுருநாதன், கோனுளம்பள்ளம் அண்ணாதுரை, கதிராமங்கலம் செல்லதுரை மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் இம்முகாமை துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்திய அரசு கொறடா கோவி செழியன்,  பொதுத் தோவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைவரும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். அதாவது, நீங்களே ஒரு குறிக்கோளை அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு மதிப்பெண்கள் பெறப் போகிறேன் என முடிவெடுத்துக் கொள்ளுங்கள். அதை, உங்களின் கனவாக்கிக் கொள்ளுங்கள். அதிக மதிப்பெண்கள் பெற தொடா்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

மாணவ, மாணவிகள் கட்டாயம் வாட்ஸ் அப், தொலைக்காட்சித் தொடர், திரைப்படம், முகநூல், இணையதள விளையாட்டு போன்ற பொழுதுபோக்குகளில் கவனத்தைச் செலுத்தாமல் தேர்வு குறித்த கவனம் மட்டுமே இருக்க வேண்டும் என அப்போது, தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here