கும்பகோணம், மார்ச். 02 –

கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இத்திருவிழா தொடங்கியது.

அதனை தொடர்ந்து, தினந்தோறும் ஐந்து வெள்ளி பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா புறப்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல் சுவாமி புறப்பாட்டிற்காக, வெள்ளி பல்லக்கு கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, பல்லக்கில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளி தகட்டினை மர்ம நபர் திருடுவதை. கோவில் ஊழியர் செல்வம் பார்த்து, அவரை கையும் களவுமாகப் பிடித்து, அவரை கோவில் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

தொடர்ந்து, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், உடனடியாக கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அப்புகாரின் பேரில், பிடிப்பட்ட நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

அவ்விசாரணையில், பிடிப்பட்ட முதியவர் பழைய அரண்மனைக்காரத் தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் (65) என்பது தெரியவந்தது. மேலும், மணிவண்ணன் திருடிய வெள்ளி தகட்டினை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், 5 வெள்ளி பல்லக்கிலிருந்து திருடுப் போன வெள்ளி தகடுகளை, மீட்டு தர வேண்டும் என அத்திருக்கோயில் செயல் அலுவலர்  கிருஷ்ணகுமார் காவல்நிலையத்தில் அவர் அளித்துள்ள புகார்மனுவில்  குறிப்பிட்டுவுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here