தேனி கலை இலக்கிய மையம் தேனி IAS அகாடமி மற்றும் வருசநாடு வசந்தம் சொசைட்டி இணைந்து நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது.
தேனி ஜூலை,6-
தேனியில் தேனி கலை இலக்கிய மையம் வசந்தம் சொசைட்டி இணைந்து 2018 – 2019 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் பணி நிறைவு கூடலிங்கம் தலைமை ஏற்ற இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சா கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.
மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி யாளராக பணியாற்றி பணி நிறைவு செய்த அ.மாரிமுத்து அவர்களுக்கு நினைவு பரிசினை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கி சிறப்பித்தார். விழாவில் பாலக் கோம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் லெமாயு ,ஸ்ரீ ஜெயலட்சுமி ரேடியோஸ் உரிமையாளர் சுரேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி ,பெரியகுளம் மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஐசக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் .மேலும் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் வி மகாராஜன் வருஷநாடு வசந்தம் சொசைட்டி நிறுவினார் குணசேகரன், வருசநாடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் டி ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த விழாவில் சிலமரத்து பட்டி கலா பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் கல்வி செம்மல் கலா பாண்டியன் மற்றும் தேனீ பட்டாம்பூச்சி குழுவினருக்கு கல்வி சுடர் விருது பெற்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப் பிணை போடி ஜ.கா மேல்நிலைப் பள்ளி நிறுவனர் முத்து விஜயன், கலவித் துறை கண் காணிப்பாளர் பணி நிறைவு நாகராஜன் சில மரத்து பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் மரிக்குண்டு பழனிச்சாமி ராஜேந்திரன் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார் சீகபட்டி ஆசிரியர் வீரபாபு ஆகியோர் நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளராக செயல் பட்டனர் தேனி கலை இலக்கிய மைய நிறுவனர் பாண்டியராஜன் நன்றியுரை ஆற்றிய இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் தொழிலதிபர்கள் மாணவர்கள் கிராமிய கலைஞர்கள் பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்