திருவள்ளூர், ஏப். 25 –
தமிழக முதலமைச்சர், தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடத்த ஆணைப் பிறப்பிந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானூர் ஊராட்சியில் இக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சு.சுதர்சனம் முன்னிலையில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து ஊராட்சிக்கட்பட்ட பொதுமக்களிடையே கலந்துரையாடினார்.
அப்போது அவர் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு அனைத்தும் அனைவருக்கு என்ற என்ற சீரிய நோக்குடன் பல்வேறு நலத்திட்டங்களை ஏழை மக்களுக்காக தீட்டி வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் நம் திருவள்ளூர் மாவட்டம் சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள மாவட்டமாகும். அப்படி இருந்தாலும் கூட பல சமூக பிரச்சினைகளை பார்க்கும்போது, திருவள்ளூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாகும், அதனால் நம்மாவட்டத்திற்கு சிறப்பு கவனம் எடுத்து அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.
கடந்த ஒரு வருடத்திலயே பல்வேறு திட்டங்கள் நம் மாவட்டத்திற்காகவும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள நம் மாவட்டம் போல் பின்தங்கிவுள்ள பிற மாவட்டங்களுக்காகவும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
பிரச்சினைகள் இருக்க க்கூடிய இடத்திற்கு வந்து பிரச்சினை என்னவென்று அறிந்து அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்குதான் அரசு எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாத ஒரு ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை, பொதுமக்கள் அதிகளவில் இங்கு வந்திருக்கிறீர்கள் உங்களுடையா கருத்துக்களை கட்டயமாக பதிவுச் செய்யுங்கள். அந்த கருத்துகளின் அடிப்படையில் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று சொல்லப்படும். தமிழகத்தில் தற்போது நடைப்பெற்று வரும் மக்களின் குறைகளை கேட்டறிந்து அக்குறைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்பட்டு வரக்கூடிய அரசாகும்.
முதல்வரின் முகவரி திட்டத்தின் படி உடனடியாக முதலமைச்சரின் தனி பிரிவுக்கே மனுக்கள் செலுத்துவதற்கான வசதிகள் நமக்கு உண்டு எனவும், தமிழகத்திலயே முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வந்த மனுக்கை சிறப்பாக செயல்பட்டு தீர்வு கண்டதற்காக தமிழக முதலமைச்சரின் கைகளில் இருந்து விருது பெற்றதற்கான ஒரு வாய்ப்பை திருவள்ளூர் மாவட்டத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்திருக்கிறீர்கள். அதுமட்டுமின்றி, முதலமைச்சர் தனிப்பிரிவில் வந்திருக்க க் கூடிய மனுக்களை மிகவும் சிறப்பாக நம் திருவள்ளூர் மாவட்டத்தில் தீர்வுக் காணப்பட்டு வருகிறது என்பது மேலும் சிறப்பையையும் மகிழ்ச்சியையும் தமக்கு அளிப்பதாக தெரிவித்தார்.
அதில் ஒருப்படியாக இன்றைக்கு இங்கு கிராம சபா கூட்டத்திற்கு வந்திருக்கிறோம். இது ஒரு பெரிய நகர பஞ்சாயத்து என்பதனால் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. மக்கள் தொகையோடு எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. என்பதையும் நான்றிவேன் என்றார். மேலும், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செய்ய வேண்டியுள்ளது. உங்கள் அனைவருடைய கருத்துக்களை ஏற்று , அந்த கருத்துக்களை கேட்டு அதற்குரிய தகுந்த திட்ட நிகழ்ச்சிகள் என்னவென்று பார்த்து, இருக்கின்ற திட்டங்களிலேயே எடுத்துச் செல்ல்லாமா, இல்லையென்றால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கட்டாயமாக அதற்கென புது திட்டங்களை வகுத்து இந்த கோரிக்கைகள் அனைத்துமே நிறைவேற்றுவோம் என்று உறுதியளிப்போம் என்றார். மேலும் இந்த ஊராட்சியில் மட்டும் ரூ.2,47,00,000 மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடந்து வருகிறது. அப்படியிருந்தால் கூட இது மக்கள் தொகை அதிகமாக இருக்க க்கூடிய ஒரு ஊராட்சி அதனால் இன்னும் பல்வேறு பணிகள் நடைப்பெற வேண்டிய அவசியம் உள்ளதென்றார். தொடர்ந்து இவையனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுக் காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து இச்சிறப்பு கிராம சபா குட்டத்தில் ஆட்சித்தலைவர் மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து கலந்துரையாடி தேசிய பஞ்சாயத்துராஜ் தின உறுதிமொழிநேற்றுக் கொண்டனர்.
இச்சிறப்பு கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள் ( பொறுப்பு ) அகஸ்டியன் ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், அருண்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பிரபாகரன் ஒன்றியக்குழு உறுப்பினர் தயாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.