ஆவடி, ஏப். 18 –

ஆவடியில் இந்தியன் விமானப்படை அலுவலகம் சார்பில் இன்று மோரை  ஜெ. ஜெ நகர் பகுதியில் வசித்து வரும் பொருளாதாரத்தில் பின் தங்கிவுள்ள மக்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த மோரைப்பகுதியில் உள்ள ஜே ஜே நகர் காலனியில் உடலில் சாட்டையால் அடித்து கொண்டு வாழ்வாதராம் தேடி வரும் மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகின்றனர். அவர்களுக்கு விமானப்படை படை AOC ஏர்கொமொடார் சிவக்குமார் ஏற்பாட்டில் மருத்துவ உதவிகள் வழங்கும் பொருட்டு, அப்பகுதியில் இலவச பொது மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் தலைவர்  அவுவா லோக்கல் திருமதி ஷீபா சிவகுமார், குரூப் கேப்டன், தலைமை நிர்வாக அதிகாரி பொற்செல்வன், மற்றும் விங் கமாண்டர் மருத்துவ உயர்  அதிகாரி அனுபம் திமொதி,  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சிறப்பு மருத்துவ முகாமில், ரத்தம், கண், பல் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை போன்ற பொது மருத்துவ சிகிச்சைகள் வழங்கி, தேவைப்படும் மருத்துவ பயனாளிகளுக்கு, மருந்து மற்றும் மாத்திரைகள் 200க்கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தை சார்ந்த பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் விமானப்படையைச் சேர்ந்த  மருத்துவ குழு மருத்துவர்கள், செவிலியர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மருத்துவ சிகிச்சையை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here