ராசிபுரம், ஏப். 14 –

ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில்  விஜய் ரசிகர்கள், ரசிகர் மன்ற  கொடியும் சாலையில் அட்டகாசம். போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு  சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில் விஜய் ரசிகர்கள்  சாலையை மறித்து விஜய் மக்கள் மன்ற கொடியுடன் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் விஜய் மக்கள் மன்றத்தினர் பீஸ்ட் படம் வெளியாவதை முன்னிட்டு ரசிகர்கள் சாலையில் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென்று வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து பேரணியாக சென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜய் அவர்கள் நடித்த திரைப்படம் பீஸ்ட் வெளியான நிலையில் தற்போது அவரது ரசிகர்கள் விஜய் மக்கள் மன்ற கொடியுடன் ரோட்டில் வாகனத்தை மறித்து போக்குவரத்துக்கு இடையூறாகவும் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here