காஞ்சிபுரம், டிச. 17 –

காஞ்சிபுரம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகம்மது பேட்டை அரக்கோணம் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான குடோனில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திற்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து  சம்பவ இடத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு 250 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசி, 150 மூட்டைகளில் இருந்து பாலீஷ் செய்யப்பட்ட  ரேஷன் அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதே குடோனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து அப்துல் செய்யது என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்து இருக்கக்கூடிய அதே நபர் மீண்டும் இச்செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து ரேஷன் கடைகளுக்கு செல்வதற்கு முன்பே  இந்த குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here