பூவிருந்தவல்லி, ஏப். 13 –

சென்னை பூவிருந்தவல்லி அருகேவுள்ள செட்டிபேட்டில் லயோலா இன்ஸ்டிடியூட்  கல்லூரியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஒன்றிணைந்து  உலகில் நடைப்பெறும் போர் மற்றும் அமைதியின்மை சூழ்நிலையை மையமாக கொண்டு உலக வாழ் மக்கள் அனைவரும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அமைதியின் சின்னமான வெள்ளை புறாக்களை பறக்கவிட்டனர்.

இதில்  தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா -உக்ரைன் போரினால் பல ஆயிரம் மக்கள் மடிந்தும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் கல்லூரி  மாணவ மாணவியர்  ஒன்று கூடி வெள்ளை உடை அணிந்தும், அமைதி வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியும் ,உலக அமைதிக்காக புறாக்களை பறக்கவிட்டனர்.

மாணவ பருவத்திலேயே உலக அமைதிக்காக சிந்திக்கும் மாணவர்களின் சிந்தனை வியப்பை தருவதாக அக்கல்லூரி தலைமை ஆசிரியர்கள் , பேராசிரியர்கள் நெகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here