தஞ்சாவூர், நவ. 21 –

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரப் பகுதியில் உள்ள புனவாசல் கிராமத்தில் சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களை வரவேற்று உழவர் விவாதக்குழு அமைப்பாளர் செபஸ்தியர் உரை நிகழ்தினார். மேலும், இப்பயிற்சிக்கு பேராவூரணி வட்டார ஒன்றிய பெரும் துணை தலைவர் ஆல்பர்ட் குணாநிதி தலைமை தாங்கினார்.

வேளாண்மை துணை இயக்குநர் பாலசரஸ்வதி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். அப்போது அவர் உயிர் உரங்களின் பயன்பாடுகள் பற்றியும் தென்னையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துரைத்தார்.

தொடர்ந்து உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் கண்ணன் உரை நிகழ்த்தும் போது, தென்னையில் உள்ள பிஞ்சுகளை சேத படுத்தும் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் உழவன் செயலியின் பயன்பாடுகள் பற்றியும், மேலும், நெல் விதை நேர்த்தி செய்யும் முறை பற்றி செயல் முறை விளக்கம் செய்து காட்டினார்.

பேராவூரணி வட்டார  வேளாண்மை உதவி அலுவலர் ரேவதி மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் தர்மதுரை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்களை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். இக்கிராமப்புற பயிற்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.

மேலும்  உழவர் விவாதத்துக்குழு அமைப்பாளர் மரியம்மாள் பயிற்சிக்கான   ஏற்பாடுகளை செய்திருந்தார். நிகழ்வின் முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் உதவி தொழில்நுட்ப மேலாளர் நெடுஞ்செழியன் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here