திருவாரூர், மே. 11 –

தமிழ்நாடு முழுவதும் இன்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தினர் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, அச்சங்கத்தினரின் எட்டு அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தைச் சார்ந்த 900 அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு பட்டனர்.

ஊராட்சி செயலாளர்களுக்கு மாதம் தோறும் ஊதியம் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும், சமூக தணிக்கை செய்யும் அதிகாரிகள் மாற்றப்படாமல் பழைய அதிகாரிகளே தொடர வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தைச் சார்ந்தவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நன்னிலம் குடவாசல் கொரடாச்சேரி முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி மன்னார்குடி வலங்கைமான் நீடாமங்கலம் என பத்து ஒன்றியங்களிலும் 900 ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தைச் சார்ந்த ஊழியர்கள் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தினால் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஊரக வளர்ச்சி அலுவலங்களில் அலுவலர்கள் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here