டெல்லியில் கடந்த வாரம் சபியா என்ற பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி இராமநாதபுரம் அரசு பனிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம், செப். 9 –

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முஹமது ஆயூப்கான் தலைமை வகித்தார்.  கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆரிப்கான் , மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது பசீர் , மாவட்ட துணை செயலாளர்கள் மன்சூர் , தஸ்தஹீர் , ஜியாவுல் ஹக் சுல்தான் , யாசர் , ஆகியோர் முன்னிலையில் 500 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

 மாநில துணைத் பொதுசெயலாளர் அப்துல் கரிம் கண்டன உரையில் பேசியதாவது;

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக உலக அளவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது இந்நிலையில் மத்திய அரசு பெண்களுக்கான பாதுகாப்பை முன்னெடுக்க தவறிவிட்டது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் பணியாற்றிய பெண் காவலருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு மற்ற அரசு ஊழியர்களாக இருக்கும் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பாதுகாப்பு துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்கிற போதும் இந்த குற்றவாளிகள் இதுவரை கைது செய்து தண்டிக்க படாமல் இருப்பது மத்திய அரசு பெண்களை பாதுகாப்பதில் தவறிவிட்டது என தெரிகிறது. என இவ்வாறு பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here