இராமநாதபுரம், ஆக. 15 –
News collecting I.Sivasankaran
ஏ.வி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின வைர விழா கொண்டாடப்பட்டது. சேர்மன் எவரெஸ்ட் ஜுவல்லரி பி லிட் உரிமையாளர் வாசுதேவன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஆயிர வைஸ்ய மகாஜன சங்கம் தலைவர் மோகன் தலைமை உரையாற்றினார். பள்ளி தாளாளர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். பின்பு இவ்விழாவில் பங்கேற்றவர்கள் அனைவரும் மறைந்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் திருவுருவப் படங்களுக்கு மாலையும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். பெற்ற சுதந்திரத்தை போற்றும் வகையிலும் அதனை பேணிக் காக்கும் வகையிலும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டு ஒருவருக் கொருவர் சுதந்திர தின வாழ்த்துக்களை கூறி கொண்டனர். முன்னதாக பள்ளி துணை முதல்வர் சாந்தி வரவேற்புரை ஆற்றினார். உடற்கல்வி ஆசிரியர் பிரசாத் நன்றி கூறினார்.